மின் கட்டண திருத்தம் பெப்ரவரி 15 வரை...!



கடந்த முதலாம் திகதி முதல், அமைச்சரவை அனுமதி வழங்கிய மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“மின் கட்டண திருத்ததிற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் அந்த புதிய மின் கட்டண திருத்தம் பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post