'பொன்னியின் செல்வன் -2' பணியில் தீவிரம் காட்டும் நடிகர் பார்த்திபன்…!


’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். 

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது. 

இதையடுத்து 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் 2023-ஆம் ஆண்டு ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு வீடியோ மற்றும் போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தில் டப்பிங் பணியில் நடிகர் பார்த்திபன் ஈடுபட்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post