கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானைக் களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (14.01.2023) கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முஜிபுர் ரஹ்மான் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Tags
Local News
