'வாரிசு' திரைப்படத்தின் தெலுங்கு ரிலீஸ் தேதி அறிவிப்பு...!


வாரிசு' திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அந்த டிரைலரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். 'வாரிசு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு மொழி ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்து உள்ளார். அதன்படி தெலுங்கில் வரும் 11-ம் தேதி வாரிசு திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் மாற்றம் செய்யப்பட்டு வரும் 14-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post