சவூதி அரேபிய நகர வீதியில் நிர்வாணமாக நடந்து சென்ற பெண் கைது..!!


சவூதி அரேபியாவின் வீதியொன்றில் நிர்வாணமாக நடந்து சென்ற பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெத்தா நகரில் அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜெத்தா நகரிலுள்ள சந்தியொன்றின் மத்தியிலிருந்து இப்பெண் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

அப்பெண் தனது ஆடைகளைக் களைந்து கைகளில் ஏந்தியவாறு நிர்வாணமாக நடந்து சென்றார். அவரைப் பின்தொடர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், ஆடைகளை அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார் எனத் தெரிவிக்கப்படுகிறது,

ஆனால், அப்பெண் வீதியின் நடைபாதையை அடைந்தபின், ஆடைகளை கீழே வைத்துவிட்டு, பொலிஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

அப்பெண் கைது செய்யப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என ஜெத்தா பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பெண் உளவியல் பாதிப்புக்குள்ளானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது இந்த மாதம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post