இன்றைய தங்க நிலவரம்...!


கொழும்பு – செட்டியார் தெருவில் 24 கரட் தங்கத்தின் விலை 1,82,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் விலை 1,67,000 ரூபாவாகவும் இன்று பதிவாகியுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னர் 24 கரட் தங்கத்தின் விலை 1,67,000 ரூபாவாக காணப்பட்டது.

அதன் பின்னர் படிப்படியாக தங்கத்தின் விலை உயர்வடைந்து, 1,72,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையிலேயே தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை காரணமாக 10,000 ரூபா வரை வெளிநாடுகளை விட இலங்கையில் அதிகமாகவே தங்கத்தின் விலை உள்ளதாகவும் அகில இலங்கை தங்க நகை வர்த்தகர் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் குறிப்பிட்டார்.

இதனிடையே, தங்க விலை அதிகரிப்பினால் தாம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

முதலீட்டிற்கு ஏற்ற ஆதாயம் கிடைப்பதில்லை என அவர்கள் விசனம் வௌியிட்டனர்.

திருமணங்களுக்கு கூட மக்கள் குறைவான அளவிலேயே தங்கம் கொள்வனவு செய்வதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

நடுநிலை மற்றும்  நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...

Post a Comment

Previous Post Next Post