மேலும் பொதுப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக ஆட்பதிவுத் திணைக்களத்தினால் சான்றளிக்கப்பட்ட ஆவணத்தை மாத்திரமே ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் என அதன் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வழங்கப்பட்ட ஆவணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை செல்லுபடியாகும் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தற்போது நிலவும் தட்டுப்பாடு நீக்கப்படும் வரை தேசிய அடையாள அட்டை விநியோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு...
STAR 'செய்திகள்'
