டுவிட்டரின் தற்போதைய பெறுமதி 20 பில்லியன் டொலர்க‍ளே : இலோன் மஸ்க்...!


டுவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய பெறுமதி 20 பில்லியன் டொலர்களே என அதன் உரிமையாளர் இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பங்குரிமை இழப்பீட்டுத் திட்டமொன்று தொடர்பில், ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் இதனை இலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

5 மாதங்களுக்கு முன்னர் 44 பில்லியன் டொலர்களுக்கு இந்நிறுவனத்தை இலோன் மஸ்க் வாங்கியமை குறிப்பிடத்தக்கது.

டுவிட்டர் கடும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ள இலோன் மஸ்க், ஒரு கட்டத்தில் இந்நிறுவனம் வங்குரோத்தாகும் அபாயத்தையும் எதிர்நோக்கியது எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டுவிட்டரை தான் வாங்கிய பின்னர், டுவிட்டரிலிருந்து வெளியேறிய விளம்பரதாரர்கள் தற்போது மீண்டும் வர ஆரம்பித்துள்ளனர் எனவும் இலோன் மஸ் கூறியுள்ளார்.

டுவிட்டரை இலோன் மஸ்க் வாங்கிய பின்னர், அந்நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 7,500 இலிருந்து சுமார் 2,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post