சட்டசபைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து வருகை..!


ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து சட்டசபைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர்.

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் இன்று கருப்பு உடையில் பங்கேற்று உள்ளதாக காங்கிரஸ் எம்.பி.க்கள். அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு இன்று வருகை தந்தனர். அப்போது ராகுலுக்கு ஆதரவாக இருப்போம் என்ற வாசகத்துடன் கூடிய பாதகைகளுடன் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி காங்.எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு வந்தனர்.

Post a Comment

Previous Post Next Post