இஸ்ரேல் புதிய உளவுச் செய்மதியை விண்வெளிக்கு ஏவியது...!


புதிய உளவுச் செய்மதி ஒன்றை இஸ்ரேல் இன்று விண்வெளிக்கு ஏவியது.

இஸ்ரேலின் ம்திய பிராந்தியத்திலுள்ள விண்வெளி ஏவுதளமொன்றிலிருந்து அதிகாலை 02.10 மணிககு இந்த செய்மதி ஏவவ்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த இராணுவ செய்மதிக்கு Ofek-13 என பெயரிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய அரசுக்குச் சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ரீஸ் நிறுவனத்தினால் இந்த செய்மதி உருவாக்கப்பட்டது.

இஸ்ரேல் முதல் தடவையாக 1988 ஆம் ஆண்டு செய்மதியொன்றை சுயமாக விண்வெளிக்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post