நியூஸிலாந்து அணிக்கு அபார வெற்றியிலக்கா...!


இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் சரித் அசலங்க 67 ஓட்டங்களையும் குசல் பெரேரா ஆட்டமிழக்காமல் 53ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் நியூஸிலாந்து அணிக்கு 197 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post