கீர்த்தி சுரேஷ் சகோதரி டைரக்டர் ஆனார்...!


தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் மூத்த நடிகையான மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேனகா தமிழில் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் சகோதரி ரேவதி சுரேஷ் தற்போது டைரக்டராகி உள்ளார். 

சில வருடங்களாக தமிழ், மலையாள பட உலகில் பிரபல டைரக்டராக இருக்கும் பிரியதர்ஷனிடம் ரேவதி சுரேஷ் உதவி இயக்குனராக பணியாற்றி பயிற்சி பெற்று வந்தார். தற்போது படம் இயக்க வந்துள்ளார். 

புதிய குறும்படம் ஒன்றை ரேவதி சுரேஷ் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்துக்கு 'தேங்க் யூ' என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. படத்தின் போஸ்டரை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு டைரக்டரான சகோதரிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

ரேவதி சுரேஷ் ஏற்கனவே மலையாள படம் ஒன்றை தயாரித்துள்ளார். குறும்பட டைரக்டராகி உள்ள ரேவதி சுரேஷ் விரைவில் திரைப்படம் டைரக்டு செய்யவும் தயாராகி வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post