பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததால் 9 பேர் பலி...!


பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிராந்தியத்தில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததால் குறைந்தபட்சம் 9 பேர் பலியானதுடன் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

சுதோன்தி மாவட்த்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனக்குப் பரிச்சயமற்ற பகுதியில் பஸ்ஸை செலுத்தி வந்த சாரதியின் கவனயீனத்தால் இந்த பஸ் பள்ளத்தில் வீழ்ந்தது என பொலிஸ் அதிகாரி கோட்லி ரியாஸ் முகல் தெரிவித்துள்ளார்.

மேற்படி பஸ்ஸில் 28 முதல் 30 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post