பலங்கொட, வெலிஹரனாவ பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டடத்தின் மேல் மாடியில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
62 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் அடுக்குமாடி கட்டடத்தில் வாடகை அடிப்படையில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
தவறி வீழ்ந்த பெண்
குறித்த பெண் கட்டடத்தின் மேல் மாடியில் ஏறிய சந்தர்ப்பத்தில் தவறி கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
Local News
