கொழும்பில் துப்பாக்கி முனையில் பாரிய கொள்ளை.

 கொழும்பு - மீகொடை பிரதேசத்தில் உள்ள தளபாட மொத்த விற்பனை நிலையமொன்றில் ஆயுதங்களுடன் பிரவேசித்த இருவர் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.

சந்தேக நபர்கள் இருவரும், சுமார் 80 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்து இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

இன்று மாலை மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் ஆயுதங்களுடன் விற்பனை நிலையத்திறுகுள் நுழைந்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post