தாயை கொடூரமாக அடித்துக் கொலை செய்த மகன்! குருநாகலயில் சம்பவம்...!



குருணாகல், அலவ்வ பிரதேசத்தில் தனது தாயை இரும்புக் கட்டையால் தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அலவ்வ மாபோபிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை 6 மணியளவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதே பகுதியில் வசித்து வந்த 76 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபரின் தாக்குதலால் தாய் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் மகன் மாபோபிட்டிய பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post