நண்பனின் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞனுக்கு ஏற்பட்ட சோகம்.


 சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் இளைஞர்கள் குழுவுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது காட்டு யானை சுவரை தாக்கியதில் அது இடிந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் சீகிரிய கிபிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய அவிந்த இஷான் சமரநாயக்க என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த இளைஞன் சிகிரியா பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி பெறுபவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், நெல் வயலை சேதப்படுத்திய யானை பின்னர் இளைஞர்கள் உறங்கிக் கொண்டிருந்த வீட்டின் சுவரை தாக்கியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post