கணவனை வாளால் வெட்டி கொலை செய்த பெண் பொலிஸ் வலையில்.

 குருநாகல் பிரதேசத்தில் கணவனை வாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படும் பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கொலை நேற்று பிற்பகல் ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பலகஹகம, தல்விட்ட பகுதியைச் சேர்ந்த சுரங்க பிரதீப் குமார என்ற 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்ப வன்முறை

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் மனைவி குருநாகல் போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர் என தெரிவிக்கப்படுகிறது.

கணவனை கொடூரமாக கொலை செய்த இளம் மனைவி | Wife Who Killed Her Husband With A Sword

நேற்று மாலை கணவன் மனைவிக்கு இடையில் அவர்களது வீட்டில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதுடன், அதன் போது மனைவி கணவனை வாளால் தாக்கியுள்ளார்.

கழுத்து மற்றும் இடது காலில் வாள் வெட்டு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கணவனை கொடூரமாக கொலை செய்த இளம் மனைவி | Wife Who Killed Her Husband With A Sword

குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நபர் அங்கு உயிரிழந்துள்ளார்

Post a Comment

Previous Post Next Post