வவுனியா பகுதியில் பொலிஸாரிடம் சிக்கிய காதலர்கள்.

 வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சிதம்பரபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை செய்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்கள் இருவரும் காதலர்கள் என்பதுடன், அவர்களிடம் கஞ்சாவும், தொலைபேசியினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பகுதியில் பொலிஸாரிடம் சிக்கிய காதலர்கள் | Couple Caught With Drugs Vavuniya

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பொலிஸார் பெறவுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாலக அசோக்குமாரவின் வழிநடத்தலுடன் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.நிரோசன் தலைமையில், இ.மதன்ராஜ், செ.வன்னிநாயக, சேனாதீர, மதுசங்க, ரஞ்சுலா சுபத்திரா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post