ஹீரோவின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட 2 இன் 1 வாகனம்.. ஸ்கூட்டர் அல்லது ஆட்டோ!

 

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்திற்கு சொந்தமான ஓர் ஸ்டார்ட்-அப் (Start up) நிறுவனமே சர்ஜ் (Surge). இந்த நிறுவனமே 2 இன்1 பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனத்தை தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. மெய்டன் எஸ்32 (Maiden S32) எனும் வாகனத்தையே அது அறிமுகம் செய்திருக்கின்றது

இந்த வாகனத்தை தேவைப்பட்டால் ஸ்கூட்டராகவோ அல்லது சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஆட்டாவாகவோ பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கான பிரத்யேக வசதிகளை மெய்டன் எஸ்32-வில் சர்ஜ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. ஓர் இந்திய நிறுவனம் இத்தகைய வாகனத்தை உருவாக்கி இருப்பது இதுவே முதல் முறையாகும்.


Post a Comment

Previous Post Next Post