வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடமிருந்து.

தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் "இலங்கையை வெற்றி கொள்வோம்" மக்கள்  நடமாடும் சேவை நிகழ்வுத்தட்டத்தின்  அங்குரார்ப்பண  நிகழ்வு நேற்று (31) அனுராதபுர சல்காது  விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைத்த தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ அமைச்சர் மனுஷ நாணயக்காரர நான் நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும் தீர்வொன்றில் தான் செயற்பட்டு வருவதாக  கூறினார் .

இங்கு வெளிநாட்டு வேலைகளுக்கான தொழில்சார் பயிற்சி வழங்குவது தொடர்பாக  மக்களுக்கு அறிவிக்கும்  வேலைத்திட்டம் , தொழிலாளர்களின் தொழில் கௌரவத்தையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமும்  நடைபெற்றன.

இதன் போது, ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காக மக்களுக்கு விசேட சேவைகளும் வழங்கப்பட்டன. மேலும் அமைச்சர்  கூறியதாவது:

“இலங்கையையை வெற்றிகொள்ளும் திட்டமானது நடமாடும்  சேவை அல்ல,மாறாக  நாட்டை பொருளாதார ரீதியில் உயர்த்தும் தீர்வாக  அறியப்படுகிறது. இது போன்ற இரண்டு நிகழ்வுகளை காலி மற்றும்  யாழ்ப்பாணத்தில் நடத்த உள்ளோம்  .

 நாட்டிற்கு வெற்றியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை நான் பிரதிநிதித்துவப்படுத்தினேன். மக்களுக்கு வெற்றியைக் கொண்டுவரும் வாய்ப்பிற்காக நான் நின்றேன். இந்த நாட்டின் எதிர்காலத்தை வெல்லக்கூடிய தலைமைக்காக நான் இன்று நிற்கிறேன்.

வெளிநாடு வாழ் தொழிலார்கள் சட்டரீதியாக பணத்தை  வங்கி  மூலம்  நாட்டுக்கு கொண்டு வரும் முறையை  உருவாக்கினோம் .

 ஹோப் கேட்:  பெயரில் விமான நிலையத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக தனி கேட்டை  திறந்தோம். நாட்டிற்கு டாலர்களை அனுப்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு  இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம்  :"மனுசவி" கடன் திட்டம்  . ஓய்வூதியத் திட்டம்   மற்றும் முதன்முறையாக வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மானியம்  வழங்கள் போன்றன சொயற்திட்டங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டதுள்ளன.

இந்த ஆண்டு தொழில்முனைவோரை மேம்படுத்தும் ஆண்டாக பெயரிடப்பட்டு, வெளிநாட்டில் இருந்து வரும் தொழிலாளர்களை தொழில்முனைவோராக உயர்த்தும் திட்டம் தொடங்கப்பட்டதுள்ளது .

மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க 22 மில்லியனை வழங்கியுள்ளோம்.  நாட்டை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டத்தை நாங்கள் செய்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

(சசிதரன் மட்டு  செய்தியாளர்) 

Post a Comment

Previous Post Next Post