ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் காலமானார்

 


இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் இன்று தனது 98வது வயதில் காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை பிரிதிநித்துவப்படுத்திய அவர் முன்னாள் நிதி அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரொனி டி மெல் நிதியமைச்சராக நாடாளுமன்றில் பாதீட்டை சமர்ப்பிக்கும் விதம் குறித்து அனைவரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர்.

எனினும் அவருக்கு பின்னர் வந்த நிதியமைச்சர்களால் அவரின் பாதீட்டு சமர்ப்பிப்பு முறையை பின்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post