பாடசாலை மாணவர்களை பாதுகாக்க பொலிஸார் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கை

 

பாடசாலைகளைச் சுற்றி போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட 4,983 பாடசாலைகளில் 4,876 பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அந்தந்த பாடசாலைகளைச் சுற்றி போதைப் பொருள் விற்பனை செய்ததாக 517 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம், போதைப்பொருள் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு பாடசாலை தொடர்பாகவும் அந்தந்த பாடசாலை ஆசிரியர்கள், மாணவ தலைவர்கள் மற்றும் பாடசாலைகளைச் சுற்றியுள்ள மாணவர் சமூகத்தின் பங்களிப்புடன் 5,133 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கமைய குறித்த குழு உறுப்பினர்கள் அளித்த அறிக்கைகளின்படி, 4,876 பாடசாலைகளில் போதைப்பொருள் அபாயம் ஓரளவு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை மாணவர்களை பாதுகாக்க பொலிஸார் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கை | New Measures To Protect Students

மேலும், 107 பாடசாலைகள் தொடர்பில் போதைப்பொருள் அபாயம் உள்ளதாக அக்குழுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் பாடசாலைகள் அமைந்துள்ள பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (06) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 589 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 144 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post