ஹெலிகாப்டர் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு - இரான் அதிபர் ரைசி மற்றும் வெளி விவகார அமையுச்சர் உட்பட விமானத்தில் பயணித்த உயர் அதிகாரிகள் அனைவரும் பலி.

ஹெலிகாப்டர் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு - இரான் அதிபர் ரைசி பலியாகி இருக்கலாம் என அச்சம்


பட மூலாதாரம், GETTY IMAGES
19 மே 2024


இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறுகிறது.


இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியனும் அந்த ஹெலிகாப்டரில் இருந்ததாக கூறப்படுகிறது.


மோசமான வானிலை காரணமாக மீட்புப் படையினர் அந்த இடத்தை அடைவதில் சிக்கல் நீடிப்பதாக இரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி கூறினார்.
விளம்பரம்



இரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டரைத் தேடுவதற்கு உதவ துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் ஒன்று முக்கிய தடயம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் யாரும் உயிர் பிழைத்திருக்கும் அறிகுறி இல்லை என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கடும் பனிமூட்டம் - மீட்புப் பணியில் சிக்கல்


கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.


அவரது கூற்றுப்படி, மலை மற்றும் மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடிகிறது.


அவசரகால மீட்புக் குழுவினருடன் இருக்கும் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர், தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் விமானத்தை கண்டுபிடிப்பது கடினம் என்று கூறுகிறார்.

விபத்து நடந்தது எங்கே?


இரான் - அஜர்பைஜான் எல்லையில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவுடன் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பங்கேற்று விட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.


இரானின் வடகிழக்கு நகரான தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்த போது 50 கி.மீ. முன்னதாக வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையில் மோதியுள்ளது.


பட மூலாதாரம், IRAN PRESIDENTIAL WEBSITEபடக்குறிப்பு, இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவ்

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் எங்கே?


"பல்வேறு மீட்புக் குழுக்கள்" ஹெலிகாப்டரை இன்னும் தேடி வருவதாக இரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிடி தெரிவித்துள்ளார்.


இரானிய அரசு தொலைக்காட்சியில் பேசிய வாஹிடி, "மோசமான வானிலை மற்றும் அப்பகுதியில் நிலவும் மூடுபனி" காரணமாக விபத்து நடந்த இடத்தை மீட்புக்குழு அடைய "நேரம்" ஆகும் என்று கூறுகிறார்.


"அனைத்தும் கட்டுக்குள் இருக்கிறது. மீட்புக் குழுக்கள் தங்கள் பணியைச் செய்து வருகின்றன. கூடிய விரைவில் மீட்புப் பணி நிறைவடையும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.


இரானின் அவசர சேவைப் பிரிவு அளித்துள்ள தகவலின் படி, சம்பவ இடத்திற்கு 8 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் மோசமான வானிலை காரணமாக, மீட்புக் குழு சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.


பட மூலாதாரம், TASNEEMபடக்குறிப்பு, தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்


பட மூலாதாரம், GETTY IMAGES

ஹெலிகாப்டர் விழுந்த இடம் அடையாளம் காணப்பட்டதா?


இரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டரைத் தேடுவதற்கு உதவ துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் முக்கிய தடயம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது.


வெப்பத்தின் மூலம் ஹெலிகாப்டரின் இருப்பிடத்தை கண்டறியும் துருக்கியின் பேரெக்டர் அகின்ஸி (Bayraktar Akinci) என்ற ஆளில்லா விமானம் வெப்பத்தின் மூலத்தை அடையாளம் கண்டுள்ளதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட நீண்ட தூர ட்ரோனின் காட்சிகள், இரவில் ஒரு நிலப்பரப்பின் கழுகு பார்வை காட்சியையும், ஒரு மலைப்பகுதியில் தோன்றும் ஒரு இருண்ட புள்ளியையும் காட்டுகிறது.


இதுகுறித்த விவரம் இரானிய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக அந்த செய்தி நிறுவனம் கூறியது.


பட மூலாதாரம், GETTY IMAGES


பட மூலாதாரம், GETTY IMAGES

ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிப்பு


இரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.


பல மணி நேர தேடுதலின் முடிவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்த இடத்தை தேடுதல் குழுக்கள் கண்டுபிடித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.


இரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் பிர்ஹோசைன் கோலிவாண்ட், 'நிலைமை நல்லவிதமாக தோன்றவில்லை என்று அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.


மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் இடத்தை "சில நிமிடங்களில்" அடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.


ஹெலிகாப்டர் விழுந்து கிடப்பதாக கருதப்படும் இடத்திலிருந்து அவர்கள் தோராயமாக 2 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

"யாரும் உயிருடன் இருக்கும் அறிகுறி இல்லை"


அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டரில் இருந்த யாரும் உயிருடன் இருப்பதற்கான "அறிகுறி எதுவும் இல்லை" என்று அரசு தொலைக்காட்சி கூறுகிறது.


இரானிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, விபத்தில் ஹெலிகாப்டர் "முற்றிலும் எரிந்துவிட்டது" என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


"விபத்தில் அதிபர் ரைசியின் ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக, அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது," என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இரான் அதிபருக்காக பிரார்த்திக்க வேண்டுகோள்


இரானின் அரசு தொடர்பு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம், அதிபர் இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனை செய்யுமாறு இரானியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவர் பயணம் செய்த வாகனத்தொகுதியில் இடம் பெற்றிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த நிறுவனம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.


மஷாத் என்ற நகரில் அதிபர் ரைசி நலமாக இருக்க வேண்டி பலரும் பிரார்த்தனை செய்வதைக் காட்டும் காட்சிகளும் அரசு தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளன.


பட மூலாதாரம், GETTY IMAGES


பட மூலாதாரம், GETTY IMAGES

அஜர்பைஜான் 'ஆழ்ந்த' கவலை


இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்து பற்றிய செய்திகளைக் கேட்டதும், தான் "ஆழ்ந்த கவலை" அடைந்ததாக அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவ் கூறியுள்ளார்.


இரான்-அஜர்பைஜான் எல்லையில் இரண்டு அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் இப்ராஹிம் ரைசியுடன் அலியேவும் உடனிருந்தார்.


"இரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் இப்ராஹிம் ரைசிக்கு நட்பு ரீதியில் விடை கொடுத்தேன். அதன் பிறகு இரான் உயர்மட்டக் குழுவை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் தரையில் மோதியது என்ற செய்தியால் நாங்கள் மிகவும் கவலையடைந்தோம்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மீட்புப் பணிக்கு தேவையான எந்த உதவியையும் வழங்க அஜர்பைஜான் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்

Post a Comment

Previous Post Next Post