திருகோணமலையில் பாரிய கோர விபத்து சிறுமி ஒருவர் ஸ்தலத்தில் பலி!

 திருகோணமலையில் (Trincomalee) இடம்பெற்ற கார் விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்து சம்பவமானது இன்று (23) அதிகாலை திருகோணமலை (Trincomalee) - ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் (Jaffna) பருத்தித்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையிலேயே குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 



இந்த விபத்தில் ஆறு வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சகோதரனான நான்கு வயதுடைய நிதர்சன் அதிரேஸ் எனும் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



எனினும் கணவன் மற்றும் மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ள நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post