மொட்டை மாடியில் குவிந்து இருக்கும் கோடிகள்! பசுமை புரட்ச்சியில் அக்கரை மண்ணில் சாதனை! குவியும் மக்கள் வெள்ளம்.










குடும்பப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யும் விவசாய உற்பத்தியில் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது.

அரசாங்கம் பல்வேறு அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கி வருகின்றபோதிலும் பெரும்பாளான மக்கள் அதில் நாட்டம் கொள்ளாது இருக்கின்ற நிலையில் இத்துறையில் விருப்பமானவர்கள் பலரும் வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபட்டும் வருகின்றனர்.

அந்த வகையில் அக்கறைப்பற்றைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முஹம்மட் சிபாஸ் அவர்கள் கடந்த 15 வருடங்களாக தரையிலும், மேல் மாடியிலும் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வருகின்றார்.

மக்கள் செறிந்து வாழும் நகரப் பிரதேசங்களிலும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையை வெற்றிகரமாக முன்னெடுக்கலாம் என்பதை சமூக ஆர்வலர் சிபாஸ் அவர்கள் நிருபித்துள்ளார்.

வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதன் மூலம் வீட்டுச் செலவுகளை கட்டுப்படுத்துவதுடன் உடல் உளஆரோக்கியத்துடன் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் சிபாஸ் குறிப்பிடுகின்றார்.

கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா காலத்தில் பிரதமர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட வீட்டுத் தோட்டப் போட்டிக்காகவும்  தனது உற்பத்திப் பொருட்களை அலரி மாளிகைக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிடும் சிபாஸ் அவர்கள் மற்றவர்களும் இத்துறையில் ஈடுபட்டு நன்மையடைய வேண்டும் என்ற வகையிலும் முன்மாதிரியாக செயற்பட விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

நன்றி சிரேஷ்ர  செய்தியாளர் -  எஸ் . எம். அரூஸ் 


Post a Comment

Previous Post Next Post