கிழக்கில் ஊடுருவும் பாரிய சூறாவளி கல்முனையினை இன்று அதிகாலை தாக்கும் அப்பாயம்? உண்மை நிலவரம்!

 சூறாவளி உருவாகி இன்று இரவு 2.00 மணிக்கு கிழக்கு மாகாணம் மற்றும் கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்பவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். 

இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

"சூறாவளி உருவாகி இன்று இரவு 2.00 மணிக்கு கிழக்கு மாகாணம் மற்றும் கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்பவேண்டாம்.

அவ்வாறு ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன் அறியத்தருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் சூறாவளி தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | Important Announcement Regarding Hurricane Impact

மேலும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால் அனைவரும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றீர்கள்" என குறிப்பிட்டுள்ளார். 

பொதுமக்களே அவதானம்! நீங்கள் ஏமாற்றப்படலாம்..


Post a Comment

Previous Post Next Post