குறைவடைந்த கோழி இறைச்சி, முட்டை விலைகள் - விற்பனையும் வீழ்ச்சி

 நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைந்துள்ளதாக 

 இலங்கைகால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர (Ajith Gunasekera) தெரிவித்துள்ளார். 

மக்களுக்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினாலேயே கோழி இறைச்சி விற்பனை இவ்வாறு குறைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் 600 மெற்றிக் தொன் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டாலும், தற்பொழுது நாளாந்தம் கோழி இறைச்சி விற்பனை 500 மெற்றிக் தொன் வரை குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கோழிக்கறிக்கான தேவை குறைந்துள்ளதால் உறைந்த கோழி விலை கிலோ 800 ரூபாவாகக குறைந்துள்ளது.

குறைவடைந்த கோழி இறைச்சி, முட்டை விலைகள் - விற்பனையும் வீழ்ச்சி | Chicken Egg Prices Will Decrease Next Weeks

இந்த நாட்களில் முட்டை ஒன்றின் விலை 30 முதல் 33 ரூபா வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறைவால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உற்பத்தி செலவை ஈடுகட்ட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post