ஈரான் துறைமுகத்தில் பாரிய வெடிப்பு! 500க்கும் மேற்பட்டோர் படுகாயம்

 தெற்கு ஈரானின் முக்கிய துறைமுகத்தில் இடம்பெற்ற பாரிய வெடிப்பில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின்  ஷாஹித் ராஜீயின் தெற்கு துறைமுகப் பகுதியில் உள்ள 500ற்கும் மேற்பட்டேரே காயமடைந்துள்ளனர்.

குறித்த துறைமுகத்தில் பல கொள்கலன்கள் வெடித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஒரு பாரிய தீ விபத்து ஏற்பட்டுளளதாக கூறப்படுகிறது. மேலும் குறித்த வெடிப்பின் தாக்கம் 10 கிலோமீட்டருக்கு உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் துறைமுகத்தில் பாரிய வெடிப்பு! 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் | Bomb Blast In Iran

ஈரானின் தெற்கு கடற்கரையில் உள்ள ஹார்மோஸ்கான் மாகாணத்தில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய வணிகத் துறைமுகமான ஷாஹித் ராஜீயில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் இதுவரை குறைந்தது 561 பேர் காயமடைந்துள்ளதாக அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதிகாரிகள் இதுவரை எந்த உயிரிழப்பு குறித்து எவ்வித தகவலும் வழங்கவில்லை எனவும்,  வீதியில் மக்கள் காயமடைந்த கிடப்பதை அவதானித்தே செய்தி வெளியாகியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அரச செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post