அலகொளதெனிய மாணவர்களின் கலை மற்றும்கலாசார பரிசளிப்பு நிகழ்வு அல்ஹம்ரா பாடசாலையில்!

 


“இஸ்லாமிய மார்க்க கல்வியை திறம்பட வழங்கும்‘ குருநாகல் அலகொளதெனிய அந்நூர் குர்ஆன் பயிற்சி மத்ரசா மாணவர்களின் இஸ்லாமிய கலை மற்றும்கலாசார பரிசளிப்பு நிகழ்வு 2025.

குருநாகல் அலகொளதெனிய அந்நூர் குர்ஆன் பயிற்சி மத்ரசா மாணவர்களின் இஸ்லாமிய கலை மற்றும் கலாசார  நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மிகக் கோலாகலமாக குருநாகல் மல்லவப்பிட்டிய அல்ஹம்ரா -ஆரம்பப்பாடசாலையின் ஹாவாட் கேட்போர் கூட உள்அரங்கில்  சுயாதீன தொலைக்காட்சி  ITN, மற்றும் வசந்தம்  தொலைக்காட்சி சேவையின் பிரபல செய்தி வாசிப்பாளரும் முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரஅமைச்சின் ஊடகச் செயலாளருமான அப்துல் மஜீட் ஜெசீம் அவர்களின் நெறிப்படுத்தலிலும்  அந் நூர் குர்ஆன்பயிற்சி மத்ரசாவின் ஸ்தாபகர் பாத்திமா சவ்மினா                 முஅல்லிமா அவர்களின் ஏற்பாட்டில் கடந்தஞாயிற்றுக் கிழமை காலை 08.30 மணிக்கு இடம்பெற்றது 


இந்நிகழ்வில்பிரதம அதிதியாக பிரபல மார்க்க அறிஞ்சரும் அலக்கொளதெனிய புஷ்ரா அரபுக் கலாசாலையின்அதிபருமான அஷ் -ஷேஹ்முசம்மில் (ஹாசிமி )அவர்கள் கலந்து விசேட மார்க்க சொற் பொழிவினைநிகழ்த்தினார்


இன்நிகழ்வில் விசேட அதிதிகளாக 

மல்லவப்பிட்டி அல்ஹம்ரா ஆரம்ப பாடசாலையின் அதிபர் அஷ்ஷெஹ் மாஹிர் மற்றும்  அல கொல தெனியஜும்மாஹ் பள்ளிவாசல் நிருவாக சபையின் தலைவர் ஜனாப் சர்தான் மற்றும் செயலாளர் ஜனாப் முகமட் நிலாம் , மல்லவப்பிட்டிய ஜாமீயுல் அக்பர் ஜும்மா பள்ளிவாசல் உப தலைவர் ஜனாப் M.T.M. பாரிஸ் ஓய்வு பெற்றஆசிரியர் விவாக பதிவாளர் அல்ஹாஜ்  அசாட்  ஜேபி ஆகியோர்கள் கலந்து சிறப்பித்ததுடன்  உலமாக்கள்ஆசிரியர்கள்  கல்வியலாளர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து  கொண்டனர்


கடந்த காலங்களில் குர் ஆன் மத்ரசாவில் நடைபெற்ற இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சியில் வெற்றி ஈட்டிய மாணவமாணவிகளுக்கும் மற்றும் அல் குர்ஆன் தஜ்வீத் வகுப்பில் 3மாத கர்க்கை நெறியினை பூர்த்தி செய்தமாணவிகளுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் இந் நிகழ்வில் வழங்கி கொளரவிக்க பட்டனர் .


 





Post a Comment

Previous Post Next Post