கண்டி - பேராதனை பகுதியில் சற்று முன்னர் வீட்டுத் தொகுதி ஒன்று திடீரென்று கீழே சரிந்து விழுந்துள்ளது.
இன்று மாலை 04 மணியளவில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
குறித்த கட்டிடத் தொகுதிகள் ஆறொன்றினை அண்டி காணப்படுவதால் குறித்த அனர்த்தம் ஏற்படக் கூடும் என்று கருதி அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.
அத்துடன், அந்த வீதியும் முற்றாக மூடப்பட்டு மாற்று வழிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது குறித்த கட்டிடத் தொகுதி முற்றாக கீழே சரிந்து விழுந்துள்ளது.