​ஒரு சிறு அலட்சியம் அந்தச் சிறுமியின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிட்டது!

 

"நான் Boss கிட்ட கேட்டு கழிவறைக்கு போக வெட்கப்படுகிறேன்... அதனால நான் காலையில இருந்து வேலை முடியும் வரைக்கும் சிறுநீரை அடக்கி வைப்பேன்..."

​ஒரு சிறு அலட்சியம் அந்தச் சிறுமியின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிட்டது.

 என்ன நடந்தது⁉️


​அந்தச் சிறுமி🧒 ஒரு கடையில் வேலை பார்த்து வந்தாள். கடையில் வேலை அதிகமாக இருக்கும்போதும், முதலாளியிடம் அனுமதி கேட்கும் கூச்சத்தினாலும் சிறுநீர் வரும்போதெல்லாம் அதனை பல மணிநேரம் அடக்கி வைத்திருந்திருக்கிறாள்.


​விளைவு🙆:

சிறுநீர்ப்பையில் தேங்கிய கிருமிகள் மெல்ல மெல்ல சிறுநீரகத்தை (Kidneys) நோக்கிச் சென்றுள்ளன. ஆரம்பத்தில் இலேசான முதுகுவலி மற்றும் காய்ச்சல் வந்தபோது அவள் அதை கவனிக்கவில்லை. வலி தாங்க முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவளுடைய இரண்டு சிறுநீரகங்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது.


⚠️ ​சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துகள்:


🔴 சிறுநீரகத் தொற்று (Urinary Tract infection - UTI):  பற்றீரியாக்கள் வேகமாக வளர்ந்து சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் புண்களை ஏற்படுத்தும்.


🔴 ​சிறுநீரகக் கற்கள் (Kidneys Stones) : சிறுநீரில் உள்ள தாதுக்கள் படிந்து கற்களாக மாறக்கூடும்.


🔴 ​சிறுநீர்ப்பை விரிவடைதல்(Overstretched Bladder) : அடிக்கடி அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பையின் தசைகள் வலுவிழந்து, சிறுநீரை வெளியேற்றும் திறனை இழந்துவிடும்.


🔴 ​சிறுநீரகச் செயலிழப்பு(Kidneys Failure) : கிருமித்தொற்று தீவிரமடைந்தால் உயிருக்கே ஆபத்தான சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படலாம்.


👱​பெண்களுக்கான முக்கிய குறிப்பு:

​குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் யுவதிகள் ஆண் உரிமையாளர்களிடம் வெட்கம் காரணமாக அல்லது பொதுக் கழிவறைகளின் துப்பரவின்மை கருதி சிறுநீரை நீண்ட நேரமாக அடக்கின்றார்கள். இது மிகவும் ஆபத்தானது.


💁​நினைவில் கொள்ளுங்கள்:

✅ ​நீர் போதுமானளவு குடியுங்கள்.

✅ ​சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும்போது தாமதிக்காமல் செல்லுங்கள்.

✅ ​ஆரம்பக்கட்ட முதுகுவலி அல்லது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

👉 பொது இடத்தில் அல்லது வேலைத்தளத்தில் கழிவறைக்குச் செல்ல வெட்கப்படாதீர்கள். உங்கள் சிறுநீரகம் செயலிழந்தால், அந்த வெட்கம் உங்களைக் காப்பாற்றாது!

இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும், குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் பகிருங்கள். ஒரு பகிர்வு ஒருவரது உடல்நலத்தைக் காக்கலாம்!


Post a Comment

Previous Post Next Post