Trending

குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு 5 லட்சம் அபராதம்! பொலிஸாரின் விளக்கம்

 குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்படும் என வெளியான தகவல்கள் குறித்து பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

இலங்கையில் மது போதையில் வாகனம் செலுத்துவோருக்கு ஐந்து லட்சம் ரூபா அபராதமோ அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையோ விதிக்கப்படும் என சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

குறிப்பாக இன்றைய தினம் முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக தகவல்கள் பகிரப்பட்டிருந்தது.

குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு 5 லட்சம் அபராதம்! பொலிஸாரின் விளக்கம் | Fake News About Drunk And Drive Fine

எனினும் இந்த விடயம் தொடர்பில் பிரதான ஊடகங்களில் எவ்வித செய்திகளும் பிரசூரமாகியிருக்கவில்லை. இந்த நிலையில், இந்த தகவல் போலியானது என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு போலியான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

காவல்துறையின் சமூக ஊடகக் கணக்கு வழியாகவும் இந்த போலி தகவல் குறித்து தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின் பிரகாரம் குடிபோதையில் வாகனம் செலுத்துவொருக்கு 25000 ரூபா முதல் 30000 ரூபா வரையிலான அபராதமும் ஓட்டுனர் உரிமத்தை 2 அல்லது மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கும் சாத்தியம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment