Trending

Weather Report

{Groony} $results={4} $label={World News} $type={feat}

Local News

World News

{World News} $results={3} $label={World News} $type={grid}

Popular Posts

103 வருடங்களுக்கு முதல் வாழ்ந்த அபூர்வ மிருகம் சிக்கி பில்லா மீண்டும் இலங்கை யால வனப்பகுதியில்.

சுமார் 103 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்ததாக கூறப்படும் சிக்கி பில்லா எனும் அபூர்வ மிருக இனம் ஒன்று மீண்டும் இலங்கையின் யால வனப்பகுதியில் நடமாடுவதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளதோடு அந்த அபூர்வ விலங்கினை புகைப்படம் எடுத்து மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 

கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து ஒருவர் மரணம் - மூவர் படுகாயம்

  மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் கிராமத்தில் இன்று (16) மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு திசையிலிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும், களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்த ஏனையோரும் மண்டூர் மற்றும் எருவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.  இந்த நிலையில் விபத்து இடம்பெற்ற ஸ்த்தலத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விபத்துக்குள்ளாக வாகனங்களையும், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

உலக வரலாற்றிலேயே முதல் முறையாக இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்.

ஹாலிஎல, மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது. இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.  மேற்கூரையில் விழுந்த பனிக்கட்டி உருகி தரையில் விழுந்து உருகுவதற்கு பல மணி நேரம் சென்றதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பனிக்கட்டி விழுந்த இடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வானில் இருந்து இவ்வளவு பெரிய பனிக்கட்டி வீழ்ந்தது வரலாற்றில் முதல் தடவை என பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்தார். எவ்வாறாயினும், வறட்சியான காலநிலையின் போது சிறிய பனிக்கட்டிகள் விழுவதாக கூறப்படுகின்ற போதிலும், தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இவ்வளவு பெரிய பனிக்கட்டி விழுந்தது இதுவே முதல் முறை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

காத்தான்குடியில் ராணுவம் குவிப்பு! திடீர் சுற்றிவளைப்பில் – 30 பேர் கைது...!

வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே சந்தேகத்தின் பேரில் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான நேற்று (29) இரவு சட்டவிரோதமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனப்படும் சஹ்ரான் ஹசீமின் சாகோதரியின் கணவர் மற்றும் காத்தான்குடியில் 2017-3-10 திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த சஹ்ரானின் குழுவைச் சேர்ந்த 3 பேர் உட்பட 30 பேர் ஒன்று கூடிய நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் சஹ்ரானின் கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடினார்களா? என்ற சந்தேகத்தின

பள்ளியில் அதிகாலை சுபஹ் தொழுகையில் சுஜூதில் சென்ற நிலையில் பேஷ் இமாம் மரணம்! ( வீடியோ)

 நேற்று முன் தினம் செவ்வாய்கிழமை 2024 அதிகாலை இந்தோனேசியா அல்-உலா ஜாமி மசூதியின் இமாம் சுப்ஹு தொழுகையில் சுஜூத் நிலையில் இருந்தாவாறே ஆனார்கள். இந்த துயரச் செய்தி முழு இஸ்லாமிய சமூகத்தையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். “பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள்.“     https://youtu.be/RRZgLOITxPQ?si=sU-X42h6h0zneyMR

ஹோட்டலுக்குள் நடந்த மர்மம்: பெண் உட்பட இரண்டு சடலங்கள் மீட்பு.

அம்பாறை - பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண்ணும் மற்றைய நபரும் நேற்று (12) அறை விடுதியில் தங்கியிருந்த நிலையில், மாலை 5.00 மணி ஆகியும் இருவரும் அறையை விட்டு வெளியே வராததால், ஹோட்டல் உரிமையாளர் அறுகம்பே சுற்றுலாப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸார் வந்து அறையின் கதவை உடைத்து பாரத்த போது ​​பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும் குறித்த பெண்ணை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதற்கமைய, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Recent Posts

இலங்கையில் சிக்கி பில்லா ? உண்மைக்கு புறம்பானதா! தகவல் அறியும் ஆர்வத்தில் மக்கள்

இலங்கையில் “சிக்கிபில்லா” என அழைக்கப்படும் மிருகம் உள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என  AFP  செய்தி வெளியிட்டுள்ளது. சிக்கிபில்லா தொடர்ப…

பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்தான நிலையில்.

ஸ்லோவாக்கியாப் பிரதமர் றொபேர்ட் பிக்கோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார். அரசாங்க சந்தி…

வாழைச்சேனையில் குடும்ப தகறாறில் கணவர் தூக்கில் தொங்கி உயிர் மாய்ப்பு..

தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (15) வாழைச்சேனை பொலிஸ…

மது அருந்தாமலேயே போதை ஏற்றும் விநோத நோய்!!

ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் (ஏ.பி.எஸ்.) அல்லது குடல் நொதித்தல் நோய் (Gut fermentation syndrome - GFS) என்பது ஒரு மர்மமான நோய் ஆகும்.  இது இரத்தத்தில் …

திடுகிக்டும் செய்தி! கொவிட் தடுப்பூசியால் 11,000 பேர் பலி..!

கொவிட் வைரஸை கட்டுப்படுத்த பெறப்பட்ட தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 2023 இல் ஐரோப்பிய மருந்துகள் முகமை வெளியி…

ஷார்ஜாவில் நடந்த குழந்தைகள் வாசிப்புத் திருவிழாவில் முதல் முறையாக பங்கேற்ற இலங்கை இக்ரா புத்தக நிறுவனம்.

ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்த குழந்தைகள் வாசிப்புத் திருவிழாவில் முதல் முறையாக பங்கேற்ற இலங்கையை சேர்ந்த இக்ரா புத்தக நிறுவனம் பங்கேற்றது.  ஷார்ஜா…

தூக்கில் தொங்கிய 09 வயது மாணவி! விளையாட்டு வினையானது!

மின் விசிறியில் சேலையை போட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக கழுத்து இறுகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. த…

பெறுமதி மிக்க தங்கப் புதையல்களுடன் கற்பிட்டி ஆலங்குடா பகுதியில் ஒருவர் கைது! தங்க ஆமை தங்க வாள் என்பனவும் மீட்பு

கற்பிட்டி - ஆலங்குடா பகுதியில் வீடொன்றிலிருந்து , சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் , தங்கத்தலானது என சந்தேகிக்கப்படும்  தொல்பொருட்…

19 மாத பெண் குழந்தையொன்றின் தொண்டையில் க​ரட் துண்டு இறுகி குழந்தை மரணம்.

19 மாத பெண் குழந்தையொன்றின் தொண்டையில் கரட் துண்டொன்று சிக்கியதில், அக்குழந்தை உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 1…

பொலிஸ் விரட்டிச் சென்ற நபர் மரணமடைந்ததால் பதற்றம்.

யாழ்ப்பாணம் - புன்னாலைக் கட்டுவனில் நேற்று இரவு பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் பொதுமக்கள…

Around the World

Sports News

Business News