பொலிஸ் விரட்டிச் சென்ற நபர் மரணமடைந்ததால் பதற்றம்.

யாழ்ப்பாணம் - புன்னாலைக் கட்டுவனில் நேற்று இரவு பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மறித்துள்ளனர்.

இதன் போது குறித்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபர் பயணித்த மோட்டார் வண்டியை உதைந்து விழுத்தியதில் குறித்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Post a Comment

Previous Post Next Post