19 மாத பெண் குழந்தையொன்றின் தொண்டையில் க​ரட் துண்டு இறுகி குழந்தை மரணம்.

 

19 மாத பெண் குழந்தையொன்றின் தொண்டையில் கரட் துண்டொன்று சிக்கியதில், அக்குழந்தை உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 11ஆம் திகதி மாலை வீட்டில் இருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்த பெற்றோர், குழந்தையை 1990 அம்புலன்ஸ் சேவையின் ஊடாக நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலையில் இருந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை உடனடியாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே குழந்தை உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

(Thanks Lankadeepa)


Post a Comment

Previous Post Next Post