Popular Posts
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் கிராமத்தில் இன்று (16) மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு திசையிலிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்றும், களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்த ஏனையோரும் மண்டூர் மற்றும் எருவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் விபத்து இடம்பெற்ற ஸ்த்தலத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விபத்துக்குள்ளாக வாகனங்களையும், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்....
குருநாகல் மல்லவப்பிட்டிய உஸ்வத்துல் ஹஸனா குர்ஆன் பயிற்சி மத்ரசா மாணவர்களின் இஸ்லாமிய கலை மற்றும் கலாசார போட்டி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மிகக் கோலா கலமாக குருநாகல் மல்லவப்பிட்டிய அல்ஹம்ரா - ஆரம்பப் பாடசாலையின் திறந்த வெளி அரங்கில் மத்ரசாவின் அதிபர் அஷ் ஷேஹ் ஆசாத் ஹக்கீமி தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது . இந்நிகழ்வில் , பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ் - ஷேஹ் , ரிஸ்வி முப்தி அவர்கள் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதி தலைவரும் நாடறிந்த பிரபல மார்க்க சொற்பொழிவாளருமான அஷ் ஷேஹ் உமர்த்தீன் ர...
ஹாலிஎல, மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது. இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். மேற்கூரையில் விழுந்த பனிக்கட்டி உருகி தரையில் விழுந்து உருகுவதற்கு பல மணி நேரம் சென்றதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். பனிக்கட்டி விழுந்த இடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வானில் இருந்து இவ்வளவு பெரிய பனிக்கட்டி வீழ்ந்தது வரலாற்றில் முதல் தடவை என பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்தார். எவ்வாறாயினும், வறட்சியான காலநிலையின் போது சிறிய பனிக்கட்டிகள் விழுவதாக கூறப்படுகின்ற போதிலும், தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இவ்வளவு பெரிய பனிக்கட்டி விழுந்தது இதுவே முதல் முறை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு வேலைக்காக சவுதி சென்ற மனைவி கொடூர துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியதன் காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தம்புள்ளை அலகொலவெவ என்ற துார பிரதேசத்தில் வசித்து வந்த 4 பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய நபரே நேற்று (07) இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளார். தம்புள்ளை நகரில் அமைந்துள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வீட்டு வேலைக்காக சவுதி அரேபியா சென்றுள்ளார். இதன்போது வீட்டு உரிமையாளரினால் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை சந்திக்க நேரிட்டதாகவும், வீட்டு உரிமையாளரின் மகன் தன்னை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இதனை வீட்டின் உரிமையாளரிடம் கூறியதையடுத்து, 15 நாட்களுக்கும் மேலாக உணவின்றி அறையில் அடைக்கப்பட்டதாகவும், கழிவறையில் தண்ணீர் குடித்து தான் வாழ்ந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், சவுதி தூதரகம் மற்றும் சவூதி பொலிஸாருக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி தகவல் வழங்கி...
வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே சந்தேகத்தின் பேரில் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான நேற்று (29) இரவு சட்டவிரோதமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனப்படும் சஹ்ரான் ஹசீமின் சாகோதரியின் கணவர் மற்றும் காத்தான்குடியில் 2017-3-10 திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த சஹ்ரானின் குழுவைச் சேர்ந்த 3 பேர் உட்பட 30 பேர் ஒன்று கூடிய நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் சஹ்ரானின் கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடினார்களா? என்ற சந்தேகத்தின...
நேற்று முன் தினம் செவ்வாய்கிழமை 2024 அதிகாலை இந்தோனேசியா அல்-உலா ஜாமி மசூதியின் இமாம் சுப்ஹு தொழுகையில் சுஜூத் நிலையில் இருந்தாவாறே ஆனார்கள். இந்த துயரச் செய்தி முழு இஸ்லாமிய சமூகத்தையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். “பார்த்து விட்டு அனைவருக்கும் பகிருங்கள்.“ https://youtu.be/RRZgLOITxPQ?si=sU-X42h6h0zneyMR