இலங்கை நடு வானில் பறந்த 250 மாணவர்கள்!

 

250 சிறுவர்களுடன் ஆரம்பமானது 'தெரண சிக்னல் ஆகாயத்தில் ஒரு பயணம்'

நாடளாவிய ரீதியிலுள்ள 250 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் இற்கு சொந்தமான நாட்டின் மிகப்பெரிய விமானம், சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டின் கவர்ச்சிகரமான சிறப்புமிக்க இடங்களை வானிலிருந்து காணும் வாய்ப்பை சிறுவர்களுக்கு வழங்கிய தெரண,சிக்னல் ஆகாயத்தில் ஒரு பயணம் திட்டம் வெற்றிகரமாக ஆரம்பமானது. 

12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 'ஆகாயத்தில் இருந்து என் நாடு' எனும் கருப்பொருளின் கீழ் 250 சொற்களுக்கும் குறையாமல் கட்டுரை அல்லது ஓவியம் இரண்டில் ஒன்றை தயார் செய்து அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டது.

இதில் சிறந்த ஆக்கங்களை அனுப்பிய சிறுவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு, ஆகாயத்தில் ஒரு பயணம் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் மிகப்பெரிய விமானமான UL 20 இல் சிறுவர்கள் ஏற்றிச்செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post