பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்தான நிலையில்.

 

ஸ்லோவாக்கியாப் பிரதமர் றொபேர்ட் பிக்கோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார்.

அரசாங்க சந்திப்பொன்று நடைபெற்ற ஹன்ட்லோவா நகரத்திலுள்ள கலாசார சமூக நிலையத்துக்கு முன்னால் சனத்திரளை சந்தித்த வேளையிலேயே பிரதமர் பிக்கோ சுடப்பட்டுள்ளார்.

சில துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்கப்பட்ட பின்னர் பிரதமர் பிக்கோவின் பாதுகாப்பு படையணியானது அருகிலுள்ள காரொன்றுக்குள் அவரைச் செலுத்தியுள்ளது.

பிரதமர் பிக்கோ வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன், அவரது தாக்குதலாளியெனக் கூறப்படுபவர் பொலிஸாரால் கைது செய்ய்யப்பட்டுள்ளார்.

அருகிலுள்ள வைத்தியசாலைக்கு ஹெலிகொப்டரில் கொண்டு செல்லப்பட்ட பிரதமர் பிக்கோ, பின்னர் ஹன்ட்லோவாவின் கிழக்கிலுள்ள பன்ஸ்கா பைஸ்ட்டிரிக்காவிலுள்ள இன்னொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் உக்ரேனுக்கான இராணுவ உதவியை பிரதமர் பிக்கோ நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.  

Post a Comment

Previous Post Next Post