இலங்கையை உலுக்கிய கோர விபத்து: ஸ்தலத்தில் மூவர் பலி - மூவர் படுகாயம்

 கேகாலை, வேவல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக கண்டியில் இருந்து வந்த குடும்பமே உயிரிழந்துள்ளது.


கொழும்பில் இருந்து கண்டி, கெலிஓய பகுதியிலுள்ள அவர்களின் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. 

இலங்கையை உலுக்கிய கோர விபத்து: ஸ்தலத்தில் மூவர் பலி - மூவர் படுகாயம் | Three Persons Including The Auto Driver Killed

சாரதியின் தூக்கத்தினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



Post a Comment

Previous Post Next Post