Trending

இலவச விசா வழங்கும் முக்கிய நாடு: நனவாகப்போகும் இலங்கையர்களின் வெளிநாட்டு கனவு!

  மலேசியாவின் (Malaysia) சுற்றுலா அதிகாரிகள், இலங்கையர்களுக்கு இலவச விசா (Visa-Free Travel) வழங்கும் திட்டத்தை நடமுறைபடுத்த செயற்பட்டு வருவாக தெரியவந்துள்ளது. 

இதற்கான பரிந்துரைகள் மலேசிய அரசுக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று Tourism Malaysia அமைப்பின் முக்கிய அதிகாரி நுவால் பாதிலா கு அஸ்மி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வ கோரிக்கை விடுத்தால் இந்த திட்டம் மேலும் வலுவடையும் என்றும் இலங்கையில் உள்ள மலேசிய தூதரகமும் இந்த முயற்சிக்கு ஆதரவு தருகிறதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா சென்ற இலங்கையர்கள்

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு மட்டும் 58,000 இலங்கையர்கள் மலேசியாவுக்கு பயணம் செய்துள்ளதாகவும், இது 2019 ஆம் ஆண்டின் 26,058 பயணிகளுடன் ஒப்பிடுகையில் 122% அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலவச விசா வழங்கும் முக்கிய நாடு: நனவாகப்போகும் இலங்கையர்களின் வெளிநாட்டு கனவு! | Free Visa For Sri Lankans To Travel Malaysia

இதன்படி, மலேசியா 2025 ஆம் ஆண்டுக்குள் 31.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை, மற்றும் 2026 ஆம் ஆண்டுக்குள் 35.6 மில்லியன் பயணிகளை ஈர்ப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தி வருவதாக மேலும் கூறப்படுகிறது.

குறித்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக பசுமைச் சுற்றுலா (Sustainable tourism), கலாசாரம் மற்றும் மரபு, இயற்கை மற்றும் சாகசம், டிஜிட்டல் புதுமை மற்றும் உலகளாவிய உறவு என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இலவச விசா வாய்ப்பு

இந்த நிலையில், மலேசியாவின் புதிய இலவச விசா திட்டத்தின் கீழ், 130க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் விசா இல்லாமல் மலேசியா செல்ல அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலவச விசா வழங்கும் முக்கிய நாடு: நனவாகப்போகும் இலங்கையர்களின் வெளிநாட்டு கனவு! | Free Visa For Sri Lankans To Travel Malaysia

இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது இலங்கைக்கும் இதுபோன்ற இலவச விசா வாய்ப்பு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் நிறைவேறினால், இலங்கையர்கள் எதிர்காலத்தில் மலேசியா செல்ல விசா பெற வேண்டியதில்லை, இது சுற்றுலா, வணிகம் மற்றும் இருநாட்டு உறவுகள் வளர்ச்சிக்கு பெரிய பயனளிக்கும்

Post a Comment