Trending

ஆழக்கடலில் மில்லியன் கணக்கான மின்னும் தங்க முட்டைகள்... அதன் மர்ம பின்னணி.

 

கனடாவின் பசிபிக் கடற்பகுதியின் ஆழக்கடலில் எரிமலைக்கு அருகே, ஆழ்கடல் இனம் ஒன்று இடும் மில்லியன் கணக்கான ஒளிரும் தங்க முட்டைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தங்க முட்டைகள்

குறித்த எரிமலையானது ஒரு காலத்தில் செயலற்றதாகவும், உயிர்கள் வாழ முடியாத அளவுக்குக் குளிராக இருப்பதாகவும் நம்பப்பட்டது, ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு அந்தப் பகுதிக்கு புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆழக்கடலில் மில்லியன் கணக்கான மின்னும் தங்க முட்டைகள்... அதன் மர்ம பின்னணி | Glowing Golden Eggs In The Deep Sea

கடல் உயிரியலாளர் Cherisse Du Preez என்பவர் தலைமையிலான குழு ஒன்று இந்த மின்னும் தங்க முட்டைகள் தொடர்பான தகவல்களை முதன் முதலில் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இது பசிபிக் வெள்ளை ஸ்கேட் மீன்களின் முட்டை என்றே நம்பப்படுகிறது. சுறாக்கள் மற்றும் கதிர்களுடன் தொடர்புடைய ஒரு ஆழக்கடல் இனம் அது. கடலின் அடிப்பகுதியில் உள்ள நீர் வெப்ப துவாரங்களுக்கு அருகில் கொத்தாக ஒளிரும் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த துவாரங்கள் புவிவெப்ப வெப்பத்தை வெளியிடுகின்றன, இது ஆழக்கடலின் உறைபனிப் பகுதியில் வியக்கத்தக்க வகையில் சாதகமான சூழலை உருவாக்குகிறது.

ஆழ்கடல் பொதுவாக குளிர்ச்சியாகவும் இருட்டாகவும் இருக்கும், ஆனால் இந்த விடயத்தில், எரிமலை வெப்பம் ஸ்கேட் மீன்கள் தங்கள் முட்டைகளை அடைகாக்க உதவுவதாகத் தெரிகிறது.

ஆழக்கடலில் மில்லியன் கணக்கான மின்னும் தங்க முட்டைகள்... அதன் மர்ம பின்னணி | Glowing Golden Eggs In The Deep Sea

பத்து ஆண்டுகள்

பசிபிக் வெள்ளை ஸ்கேட் மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியின் மிகவும் கவர்ச்சிகரமான பகுதிகளில் ஒன்று அதன் அசாதாரணமான நீண்ட அடைகாக்கும் காலம் ஆகும். இந்த முட்டைகள் குஞ்சு பொரிக்க நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை ஆகலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.

ஆழக்கடலில் மில்லியன் கணக்கான மின்னும் தங்க முட்டைகள்... அதன் மர்ம பின்னணி | Glowing Golden Eggs In The Deep Sea

எரிமலை துவாரங்களிலிருந்து வரும் வெப்பம், கரு வளர்ச்சிக்கு முக்கியமான ஆற்றலை வழங்குவதன் மூலம் இந்த மெதுவான செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

உண்மையில், கடந்த 2019ல் இந்த ஒளிரும் தங்க முட்டைகள் தொடர்பான கண்டுபிடிப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2023ல் விஞ்ஞானிகள் தரப்பு அதை மீண்டும் உறுதி செய்துள்ளது என்றே கூறப்படுகிறது.

Post a Comment