உலகில் யாருக்கும் இல்லாத புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு



கர்நாடகாவைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவருக்கு உலகிலேயே புதிய வகை இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்ணொருவர் இருதய அறுவை சிகிச்சைக்காகப் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதையடுத்து அவருக்கு அங்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில் அவரது இரத்தம் ‘O Rh+’ வகையைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலதிக பரிசோதனைகளுக்காக அந்த பெண்ணின் இரத்த மாதிரி இங்கிலாந்தில் உள்ள சர்வதேச இரத்த வகை கண்டறியும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அங்கு 10 மாதங்களாக நடைபெற்ற சோதனையில் அந்த பெண்ணுக்கு இருப்பது உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை இரத்தம் என கண்டுபிடிக்கப்பட்டது

Post a Comment

Previous Post Next Post