புதிய சிந்தனைகளை தூண்டும் சிவப்பு எறும்பு சட்னி!


சிகப்பு எறும்பை பார்த்தாலே அனைவரும்  ஓடி விடுவார்கள் . காரணம் அந்த எறும்பின் வீரியம்அது கடித்தால் ஏற்படும் வலியும்வீக்கமும் தாங்கவே முடியாதுகடித்த இடத்தில் நெருப்பை அள்ளி கொட்டியது போல் எரியும்.

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்கள்   தங்களது பாரம்பரிய உணவாக சிகப்பெரும்பு சட்டினியை ருசித்து வருகின்றனர்.  இந்த எறும்புகள் மரங்களின் இலைகளில் கூடு கட்டி வாழும்.இந்த சிகப்பெரும்பை கொண்டு சட்டினி செய்து சாப்பிடும் பழக்கம் இந்த பழங்குடியினருக்கு புதிதல்லஇந்த சட்னி ஓடிசாவில் உள்ள மக்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும்.

 Kai Chutney என்று அழைக்கப்படும் இந்த சிவப்பு எறும்பு சட்னியில் புரதம்கால்சியம்ஜிங்க்வைட்டமின் பி12, இரும்புச்சத்துமக்னீசியம்பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றனமூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவி செய்யும்நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் தன்மை இந்த சிவப்பு எறும்பில் இருக்கிறதுமனச்சோர்வை போக்கும்,சோம்பல்உடல் வலியைக் குறைக்கும் மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மலை வாழ் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த உணவின் மருத்துவ குணத்தையும் கருத்தில் கொண்டு ஜனவரி 2, 2024 அன்று இது புவிசார்  (GI) குறியீட்டை பெற்றுள்ளது.இந்த புவிசார் குறியீடு அங்கீகாரம் என்பது ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவது ஆகும். இது அந்தப் பொருளின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அப்பொருளை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது.

Post a Comment

Previous Post Next Post