102 போலி தாள்களுடன் தங்கம் வாங்க வந்தவர் கைது.

இரத்தினபுரி நகரிலுள்ள நகைக்கடை ஒன்றில் தங்க நகையை கொள்வனவு செய்ய வந்த நபர் ஒருவர் நூற்றி இரண்டு 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் பதுளை சோனாதோட்டை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

தங்க நெக்லஸ் ஒன்றை  வாங்குவதற்கு வந்த நபரின் மேசை மீது 5,000 நாணயத்தாள்கள் கட்டு ஒன்று இருந்ததால் சந்தேகத்தின் பேரில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, சோதனையின் போது பல சந்தேகத்திற்கிடமான பொருட்கள் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். .

Post a Comment

Previous Post Next Post