வெள்ளவத்தையில் கொடூர சம்பவம்: ஊழியரை தாக்கி கொலை செய்த உரிமையாளர்

 வெள்ளவத்தை (Wellawatte) பகுதியில் ஊழியரை தாக்கி கொலை செய்த கடை உரிமையாளர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (16.8.2024) காலை வெள்ளவத்தை - காவல் பிரிவுக்குட்பட்ட ஒவார் பல்பொருள் அங்காடிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு (colombo) 13, ஜம்பட்டா தெருவில் வசிக்கும் 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், உயிரிழந்தவர் பணிபுரிந்த கடையின் உரிமையாளருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கடையின் உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதானவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் கொடூர சம்பவம்: ஊழியரை தாக்கி கொலை செய்த உரிமையாளர் | Shop Owner Murder The Employee In Wellawatte

Post a Comment

Previous Post Next Post