சம்மாந்துறையில் 8 வயது சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபர் கைது

 வீடுகளுக்கு சென்று மார்க்க கல்வி புகட்டும் நபர் ஒருவறினால்  8 வயது சிறுமி ஒருவர் தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த 26.09.2024 அன்று வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 60 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு நேற்று(29) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறையில் 8 வயது சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய நபர் கைது | Man Arrested For Molesting A Girl

மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்


Post a Comment

Previous Post Next Post