யாழில் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு வருகை தராத சஜித் : பல மணிநேரம் காத்திருந்த மக்கள்

 

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச கலந்து கொள்வுள்ள தேர்தல் பரப்புரை கூட்டமானது இன்றையதினம் (15) யாழ்ப்பாணம் - மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கூட்டமானது ஒரு மணியளவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இருந்து இரண்டு மணி அளவிலேயே சஜித் அவர்கள் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பந்தல் அமைக்கப்பட்டு இருந்தாலும் வெயில் காரணமாக மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டனர். 

யாழில் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு வருகை தராத சஜித் : பல மணிநேரம் காத்திருந்த மக்கள் | Sajith Not Attend Election Campaign Meeting Jaffna

மதியம் பிரதான உணவு வேளையிலேயே கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டதால் மக்கள் காலை 11.00 மணிக்கே பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட மக்களுக்கு உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை. சுமார் 4000 பொதுமக்கள் இந்த பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு இன்னல்களை அனுபவித்தனர். 


Post a Comment

Previous Post Next Post