இனி மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து பயணிப்பவர்கள் இரு பக்கமும் காலை வைத்து அமர்ந்து செல்ல நடவடிக்கை!

மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து பயணிப்பவர்கள் இரு பக்கமும் காலை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும்… . ஒரு பக்கம் காலை வைத்து பயணிப்பதை தடை செய்து  புதிய சட்டம் விரைவில் நடைமுறைக்கு- இலங்கை*

காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து பயணிப்பவர்கள் தொடர்பான சட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எஸ். ஜெயலத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

“பின்ஆசனத்தில் இருப்பவர்கள் இரு பக்கமும் காலை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும். ஒரு பக்கம் காலை வைத்து செல்கின்ற வேளையில் பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன. 

அண்மையில் கூட மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற விபத்தில் 14 வயது சம்மாந்துறை மாணவி ஒருவர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்.

மோட்டார் போக்குவரத்து சட்டத்தின்படி பின் ஆசனத்தில் அமர்பவர்கள் இரு பக்கமும் காலை வைத்து செல்ல வேண்டும் என்பது சட்டம். எனவே காரைதீவு பகுதியில் இடம்பெறும் அநியாயமான உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டுமாக இருந்தால் இந்த சட்டம் மிக விரைவில் அமுலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் அதற்கு முன்னதாக இந்த அறிவித்தலை பொதுமக்களுக்கு விடுக்கின்றேன்.” என்றார்.

⭕பலரும் பலன் பெற தகவல்களை  Forward செய்து.... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்‼️*


*🪀இது போன்ற நம்பகமான  செய்திகளை உடனுக்குடன் அறிய எமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்திருங்கள் 👇*


Post a Comment

Previous Post Next Post