நவம்பர் 03 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

 எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக நவம்பர் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் நேற்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலின் கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் நேற்று ஆரம்பமாகியுள்ளது

நவம்பர் 03 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு | November 3Rd Has Been Declared As A Special Day

அதற்காக சுமார் 8,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், 2,034 நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வருட நாடாளுமன்ற தேர்தலில் 17,430,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post